வாகனத் தண்ட அதிகரிப்புக்கு அரச சாரதிகள் சங்கம் வரவேற்பு!

வரவு – செலவு திட்டத்தின் வாகனங்களின் போக்குவரத்துக் குற்றங்களுக்கான தண்டப்பணம் அதிகரித்தமை தொடர்பில் சகல தரப்பினரும் போர்க்கொடி உயர்த்தியுள்ள நிலையில், இலங்கை அரச சாரதிகள் சங்கம் அந்த அதிகரிப்பை வரவேற்றுள்ளது.
சாரதிகளின் கவனவீனத்தல் நாளாந்தம் வீதி விபத்துக்கள் அதிகரித்து ஏராளமான உயிர்கள் பலியாவதைக் குறைப்பதற்கு இதுவே சிறந்த வழியென அந்தச் சங்கத்தின் செயலாளர் பீ.ஏ.எஸ். அருணகுமார தெரிவித்துள்ளார்.
உலகின் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும்போது இலங்கையில் விதிக்கப்படும் தண்டப்பணம் மிகக் குறைவே எனவும், அதிகரித்த தண்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு முன் வீதிகளில் அமைக்கப்பட்டுள்ள சமிஞ்சை விளக்குகள் போக்குவரத்துக் குறிகள் போன்றவற்றில் கவனம் செலுத்தப்பட வேண்டுமெனத் தெரிவித்த அவர், இது தொடர்பாக விரிவான கடிதமொன்றை ஜனாதிபதிக்கும் அதன் பிரதிகளை பிரதமர், போக்குவரத்து அமைச்சர், நிதியமைச்சர் ஆகியோருக்கும் அனுப்பி வைத்திருப்பதாகவும் கூறினார்.
Related posts:
|
|