வாகனத்தில் மோதி பாடசாலை மாணவி பலி: புங்குடுதீவில் சம்பவம்!

Wednesday, January 24th, 2018

புங்குடுதீவு மகா வித்தியாலயத்திற்கு அருகாமையில் இன்று (24) காலை 8.00 மணியளவில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அதே இடத்தினைச் சேர்ந்த திருலங்கன் கேசனா (வயது 9) என்ற மாணவி தனது மாமனாருடன் மோட்டார் சைக்கிளில் பாடசாலைக்குச் சென்று கொண்டிருந்த போதே கடற்படையின் வாகனம் மோதி விபத்துள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் மாணவி சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, ரோமன் கத்தோலிக்க பாடசாலையில் கல்வி கற்கும் குறித்த மாணவிஇ பாடசாலைக்கு மாமனாருடன் மோட்டார் சைக்கிளில் பாடசாலைக்கு சென்று உள்ளார்.

மகாவித்தியாலயத்திற்கு அருகாமையில் உள்ள கடற்படை முகாமிற்கு உணவு பொருட்களை விநியோகம் செய்ய பயன்படுத்தப்படும் கவச வாகனம் மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் மாணவி பலியாகியுள்ளார். மாமனார் சிறுகாயங்களுடன் உயிர் தப்பியுள்ளார். விபத்துத் தொடர்பாக ஊர்காவற்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.

Related posts:


செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் பிறந்ததினத்தை முன்னிட்டு தமிழர் பகுதி எங்கும் விஷேட பூஜை வழிபாட...
தீவிர புயலாக வலுப்பெற்றது நிவர் : மின் வடங்கள் அறுந்து விழுந்தால் உடனடியாக அறியத்தரவும்து - மின்சார...
M.V. எக்ஸ் பிரஸ் பேர்ள் கப்பலில் இருந்து எண்ணெய்க் கசியவில்லை - கடல்சார் பாதுகாப்பு அதிகார சபை உறுத...