வாகனத்தின் நிறம், உருவத்தை மாற்றியமைத்திருந்தால் தண்டம், அநேக சாரதிகளுக்கு சட்டமுறைமை தெரியாமல் உள்ளது அதிகூடிய அபராதம் ஒரு லட்சம் என்கிறார் சாவகச்சேரி நீதிவான்!

Monday, January 30th, 2017

வாகனப்பதிவுப் புத்தகத்தில் உள்ள உண்மையான நிறத்தை மாற்றுதல் மற்றும் வாகனத்தை உருமாற்றம் செய்தல் போன்ற சட்ட விரோதச் செயற்பாடுகளுக்கு 50ஆயிரம் ரூபா முதல் ஒரு இலட்சம் வரை அபராதம் விதிக்க முடியம் என்று சாவகச்சேரி நீதிவான் திருமதி சிறிநிதி நந்தசேகரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் வாகன சாரதிகளுக்கும், போதிய சட்டமுறை தெரியாமல் உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். பாரவூர்தி ஒன்றின் பதிவு புத்தகத்தில் உள்ள நிறத்தை விடுத்து வேறு ஒரு நிறம் மாற்றியமைக்கப்பட்டமை தொடர்பான வழக்கு விசாரணை ஒன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கொடிகாமம் போக்குவரத்து பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒன்று கடந்த வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. கடந்த வாரம் கொடிகாமம் நகரப் பகுதியில் போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார், பாரவூர்தி ஒன்றை மறித்து சோதனையிட்டனர். இதன்போது அந்த வாகனத்தில் உள்ள பதிவு புத்தகத்தில் வேறு ஒரு நிறமும் வாகனத்தில் வேறு நிறமும் வேறுபட்டுக் காணப்பட்டுள்ளது. வாகனத்தின் நிறத்தை மாற்றி குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டு வெள்ளிக்கிழமை மன்றில் முற்படுத்தப்பட்டிருந்தார்.

இதன்போது அவர் அந்த வாகத்தை வேறு ஒரு நபரிடம் இருந்து வாங்கினார் எனவும், இந்த விடயம் தற்போதே தனக்குத் தெரியவந்துள்ளது எனவும் அவர் கூறினார். வாகனத்தைக் கொள்வனவு செய்யும் போது நிறத்தை பார்க்கக்கூடிய வகையில் தனது மனநிலை இருந்திருக்கவில்லை என்று சட்டத்தரணி மூலம் கூறினார். வழக்கை விசாரணை செய்ய நீதிவான் முதல் தடவை என்ற வகையில் எச்சரிக்கை செய்து விடுவித்தார்.

851189767

Related posts: