வாகனங்களை மீண்டும் இறக்குமதி செய்ய இறக்குமதியாளர்கள் சங்கம் இலங்கை மத்திய வங்கியிடம் கோரிக்கை!

Sunday, March 19th, 2023

வாகனங்களை மீண்டும் இலங்கைக்கு இறக்குமதி செய்ய அனுமதிக்குமாறு வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் இலங்கை மத்திய வங்கியிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்கவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு தற்போதைக்கு அனுமதி வழங்க முடியாது என வங்கி ஆளுநர் கலந்துரையாடலில் தெரிவித்ததாக சங்கத்தின் தலைவர் என்.கே.கமகே தெரிவித்தார்.

இந்நாட்டில் ஏற்பட்டுள்ள அந்நியச் செலாவணி நெருக்கடியால், வாகன இறக்குமதி 2021 மே 24 அன்று தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: