வாகனங்களை இறக்குமதி செய்வது குறித்து எந்த முடிவும் எட்டப்படவில்லை – அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவிப்பு!

Wednesday, September 29th, 2021

வாகனங்களை இறக்குமதி செய்வது குறித்து அரசாங்கம் இதுவரை எந்த முடிவையும் எடுக்கவில்லை என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

வாகன இறக்குமதிக்கு அனுமதிக்கும் வகையிலான முறைமை குறித்து அரசாங்கம் தற்போது விரிவாக ஆராயந்து வருகின்றது.

நாட்டில் டொலர் கையிருப்பில் இல்லாததன் காரணமாக தற்போது உடனடியாக வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்க முடியாது என மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக டொலர்களில் வரி செலுத்துவதற்கு ஒப்புக்கொள்ளும் நபர்களுக்கு வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதிப்பது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அமைச்சர் வாகனங்களை இறக்குமதி செய்வது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: