வாகனங்களில் எதிரொளிப்பான் பொருத்தி விபத்துக்களைத் தவிர்க்கவும்: யாழ் மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் !

Thursday, November 15th, 2018

விபத்துக்களைத் தவிர்ப்பதற்கு துவிச்சக்கர வண்டி, டிப்பர், லாண்ட் மாஸ்ரர் போன்ற வாகனங்களில் றியர்லைட் மற்றும் எதிரொளிப்பான் ஆகியவற்றை பொருத்துமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

மேற்படி விடயம் தொடர்பில் யாழ் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் கே.பாலித பெர்னாண்டோ விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: யாழ் மாவட்டத்தில் அண்மைக் காலமாக இடம்பெற்ற விபத்துக்களை பார்க்கும்போது துவிச்சக்கர வண்டி, டிப்பர், லாண்ட் மாஸ்ரர் போன்ற வாகனங்களில் றியர் லைட், எதிரொளிப்பான் பொருத்தப்படாமையே காரணம் என்பதை காண முடிந்தது. எனவே அனைத்து சாரதிகளும் எதிர்காலத்தில் வாகனங்களில் றியர் லைட் மற்றும் எதிரொளிப்பான் போன்றவற்றை பொருத்துவது அவசியம் பொருத்த தவறும் பட்சத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

Related posts: