வவுனியா வீடொன்றிலிருந்து ஒரே குடும்பத்தின் நால்வர் சடலங்களாக மீட்பு – திவிர விசாரணையில் பொலிசார்!
Tuesday, March 7th, 2023வவுனியா – குட்செட் வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேரின் சடலங்கள் காவல்துறையினால் மீட்கப்பட்டுள்ளன.
42 வயதுடைய தந்தை, 36 வயதுடைய தாய் மற்றும் 3 மற்றும் 9 வயதுகளையுடைய இரண்டு பிள்ளைகளும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
தந்தை தமது குடும்பத்தினரை கொலை செய்து விட்டு, தாம் உயிரை மாய்த்துக் கொண்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டனர். எவ்வாறாயினும், இதுவரை அவர்கள் உயிரிழந்தமைக்கான காரணம் வெளியாகவில்லை.
சம்பவம் தொடர்பில், வவுனியா காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது
Related posts:
இலங்கைக் குழந்தை ஒன்றின் முழுமையான கல்வி மற்றும் முழு ஆரோக்கியம் 60 வீத வளர்ச்சியை கொண்டது - உலக வங்...
குடிநீர் பாதுகாப்பை முன்னெடுக்க நாம் தவறி வருகின்றோம் - தேசிய உணவு உற்பத்திகளிலும் அதிக கவனம் செலுத்...
6 இலட்சம் பாடசாலை மாணவர்கள் காலை உணவின்றி பாடசாலைக்கு செல்கின்றனர் - வெளிப்படுத்தியது நாடாளுமன்ற வழ...
|
|