வவுனியா வளாகத்தில் மாணவர்கள் முறுகல்!

Monday, November 27th, 2017

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தில் நேற்று(26) இரவு தமிழ், சிங்கள மாணவர்களுக்கு இடையில் முறுகல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அங்குள்ள பல்கலைக்கழக மாணவர் விடுதிகளில் தமிழ் மாணவர்கள், பிரபாகரனின் பிறந்தநாளை கொண்டாட முற்பட்டுள்ளனர். இதன்போது சிங்கள மாணவர்கள் அதற்கு எதிர்ப்பைத் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

பின்னர் சிங்கள மாணவர்கள் அங்கிருந்து வெளியேறி, காவற்துறையில் முறைப்பாடு செய்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts: