வவுனியா மாவட்டத்தின் கொரோனா கட்டுப்படுத்தும் செயற்பாடுகள் குறித்து ஈ.பி.டி.பி யின் நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன் ஜனாதிபதிக்கு கடிதம்!
Monday, May 24th, 2021வவுனியா ஆடைத் தொழிற்சாலையின் செயற்பாடுகள் குறித்து ஜனாதிபதி, பிரதமர் மற்றும் சுகாதார அமைச்சர் ஆகியோருக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஊடாக கடிதம் மூலம் தெரியப்படுத்தி ஆடைத் தொழிற்சாலையால் ஏற்படும் கொரோனா அச்சுறுத்தலுக்கு முற்றுப்புள்ளி வைக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான குலசிங்கம் திலீபன் தெரிவித்துள்ளார்.
வவுனியா மாவட்ட கொரோனா நிலமை தொடர்பில் கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்துள்ளார் –
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –
தற்போது நாடு முழுவதும் கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ளது. வவுனியா மாவட்டத்திலும் அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
இதனைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் மாவட்ட மட்ட கூட்டத்தில் பல முடிவுகள் எட்டப்பட்டுள்ளது.
இருந்தாலும் சுகாதார பிரிவினருக்கு ஒத்துழைப்பாக பொலிசாரோ அல்லது ஏனைய அரச உத்தியோகத்தர்களோ துணை போவது குறைவாக இருக்கிறது. எனவே அனைவரும் இணைந்தால் தான் கொரோனாவால் பாதுகாக்க முடியும்.
அதேநேரம் ஆடைத் தொழிற்சாலை பணிகளை இடைநிறுத்துவதற்கு நிறைய சட்டதிட்டங்கள் உள்ளது. குறைந்தபட்சம் அங்கு வேலை செய்பவர்கள் அதிக இடைவெளிகளை பேண வேண்டும். ஆனாலும் அங்கு அசமந்த நிலையிலேயே அவர்களது செயற்பாடுகள் உள்ளன.
இது தொடர்பில் ஜனாதிபதி, பிரதமர், சுகாதார அமைச்சர் ஆகியோருக்கு அவசர கடிதம் மூலம் தெரியப்படுத்தி இந்த பிரச்சனைக்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்க உள்ளேன் என தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன் சுகாதார பணிமனைக்கு நிறைய தேவைகள் உள்ளன. அதனைப் பெற்றுக் கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|