வவுனியா மன்னகுளம் கிராமசேவையாளர் பிரிவுமக்கள் அடிப்படை வசதிகளைப் பெற்றுத்தருமாறு கோரிக்கை!

Monday, May 29th, 2017

வவுனியாமன்னகுளம் கிராமசேவையாளர் பிரிவில் வாழ்ந்துவரும் தமக்கு அடிப்படைவ சதிகளைப் பெற்றுத்தருமாறுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மன்னகுளம் கிராமசேவையாளர் பிரிவின் கீழ் புதுவிளாங்குளம், புற்குளம்,குஞ்சுக்குளம், மன்னகுளம், கொல்லர்புளியங்குளம் ஆகிய 5 கிராமங்களிலும் மீளக்குடியேறியுள்ள 270 இற்கும் மேற்பட்டகுடும்பங்கள் வாழ்ந்துவருகின்றன.

முல்லைத்தீவு வவுனியாமாவட்டங்களின் எல்லலைப்புறகிராமங்களான இக்கிராமங்கள் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே காணப்படுகின்றன.

இதனிடையேகுஞ்சுக்குளம் மற்றும் கொல்லர் புளியங்குளம் கிராமங்களுக்குஉரியவீதிகள் இல்லாத நிலையில் தாம் போக்குவரத்தைமேற்கொள்வதில் பலத்த இடர்பாடுகளை எதிர்கொள்வதாகவும் மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதுவிடயத்தில் துறைசார்ந்தஅதிகாரிகள் உரிய கவனமெடுத்து தமது பிரச்சினைகளுக்கு தீர்வுகளைக் காணும் விதத்தில் அடிப்படை வசதிகளை பெற்றுத்தர வேண்டுமென்றும் இம்மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Related posts: