வவுனியா பிராந்திய கடவுச்சீட்டு அலுவலகத்தில் சேவைகள் தொடர்பில் வெளியானது விசேட அறிவிப்பு!

Thursday, August 3rd, 2023

வவுனியா பிராந்திய கடவுச்சீட்டு அலுவலகத்தில்  சேவைகளைப்  பெற்றுக்கொள்வது தொடர்பில் பொதுமக்களுக்கு அறிவிக்கும் வகையில் குடிவரவு குடியகல்வு திணைக்களம் அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.

தற்போதுள்ள பொதுமக்களின் நெருக்கடியைக் குறைக்கும் வகையில் இன்று (03) முதல் வட மாகாணம், கிழக்கு மாகாணம் மற்றும் அநுராதபுரம் மாவட்டத்தில் வசிப்பவர்களுக்கு மாத்திரம் வவுனியா பிராந்திய கடவுச்சீட்டு அலுவலகத்தில் சேவைகளை பெற்றுக்கொள்ள முடியும் எனக்  குறித்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா கடவுச்சீட்டு அலுவலகத்தில் சேவைகளை பெற்றுக்கொள்வதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் வருகைதருவதால் அங்கு நெருக்கடி நிலை ஏற்பட்டுவருவதுடன், பொதுமக்களுக்கிடையில் குழப்பநிலையும் தொடர்ச்சியாக இடம்பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: