வவுனியா பல்கலைக்கழக அங்குரார்ப்பண நிகழ்வில் ஜனாதிபதி பங்கேற்பு!

Thursday, July 8th, 2021

யாழ்.பல்கலைகழக வவுனியா வளாகம், வவுனியா பல்கலைகழகமாஓஓகஸ்ட் மாதம் 1ஆம் திகதிமுதல் தரம் உயர்த்தப்படும் நிலையில், அதன் அங்குரார்ப்பண நிகழ்வில் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ கலந்துகொள்ளவுள்ளார்.

வவுனியாவில் நடைபெற்ற வடக்கின் உயர் கல்வி அதிகாரிகள் மற்றும் உயர் அதிகாரிகள் பங்குகொண்ட கலந்துரையாடலின் போது குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனடிப்படையில் 11 ஆம் திகதி நடைபெறும் அங்குராட்பண நிகழ்வில் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் உட்பட்டவர்கள் பங்கேற்பார்கள் என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, வவுனியா வளாகம் ஓகஸ்ட் முதலாம் திகதி தொடக்கம் பல்கலைக்கழகமாக செயற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் குறித்த பல்கலைக்கழகத்துக்கான துணைவேந்தர் தெரிவு இன்னமும் இடம்பெற்றிருக்கவில்லை என்று தெரியவந்துள்ளது.

யாழ்.பல்கலைக்கழத்தின் முன்னாள் துணைவேந்தர் ஒருவர் உட்பட்ட உயர் அதிகாரிகள் பலர் குறித்த பதவிக்கான முனைப்பில் ஈடுபட்டிருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

இதேவேளை, வவுனியா பல்கலைக்கழகம் பம்பைமடுவில் செயற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் வவுனியா பூங்காவீதியில் செயற்பட்டுவரும் நிர்வாக அலகினை பம்பைமடுவுக்கு மாற்றுவதற்கு உயர் அதிகாரிகள் சிலர் தயக்கம் காட்டிவந்த நிலையில் நேற்றைய கூட்டத்தில் உயர் அதிகாரிகள் வழங்கிய ஆலோசனைகளை அடுத்து நிர்வாக அலகினை பம்பைமடுவுக்கு மாற்றுவதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: