வவுனியா சிறுமி கூட்டு வன்புணர்வு தொடர்பில் வடக்கு பெண்கள் அமைப்புக்கள் மௌனம்!

Tuesday, November 21st, 2017

கூட்டுவன்புணர்விற்கு உட்படுத்தப்பட்ட வவுனியாச் சிறுமி தொடர்பில் வடக்கைச் சேர்ந்த எந்தப் பெண்கள் அமைப்புகளும் குரல் கொடுக்கவில்லை. இதுவே சிறுமியின் உயிருக்கு ஆபத்து நேர்ந்திருந்தால்  ஊடகங்களில் தங்களுடைய பெயர் அடிபடவேண்டும் என்பதற்கு ஆளுக்கு ஆள் கங்கணம் கட்டிக்கொண்டு கொடிகளை ஏந்தி வீதியில் நடித்து இருப்பார்கள் என்று சமூக ஆர்வலர்கள் விசனம் தெரிவித்தனர்.

இது குறித்து அவர்கள் மேலும் தெரிவித்ததாவது;

வவுனியாவில் கடந்த 14 ஆம் திகதி தனியாகச் சென்ற 16 வயது சிறுமி ஒருவரை 5 பேர் அடங்கிய குழுவினர் முச்சக்கரவண்டியில் கடத்திச் சென்றனர். அந்தச் சிறுமி கூட்டுவன்புணர்விற்கு உட்படுத்டதப்பட்டார் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்தச் சம்பவத்தை சிறுமி பெற்றோரிடம் தெரிவித்தார். பெற்றோர்களால் வவுனியாப் பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்ட?து.

இந்த நிலையில் சிறுமி தற்கொலைக்கு முறன்றார். காப்பாற்றப்பட்ட தற்போது வவுனியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

விசாரணைகளில் ஈடுபட்டிருந்த வவுனியாப் பொலிஸார் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்று குற்றஞ் சாட்டப்பட்ட இருவரைக் கைது செய்து நீதிமன்றில் முற்படுத்தினர். இருவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். சம்மந்தப்பட்ட மேலும் ஒருவரைத் தேடிவருகின்றோம் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியாவில் பெண்பிள்ளைகள் தனித்து நடமாட முடியாத ஒரு சூழல் ஏற்பட்டுள்ளதற்கு இந்த சம்பவம் ஒன்றே போதுமானது.

அவ்வாறிருக்கையில் பெண்கள், சிறுமிகளுக்காக குரல் கொமுக்க வேண்டியவர்கள் வாயை மூடிக்கொண்டிருந்தனர். புலம்பெயர் நாடுகளிலிருந்து உதவிகளைப் பெற்றுக் கொள்வதற்கே அவர்கள் லாயக்கானவர்கள் என்று சமூகஆர்வலர்கள் தெரிவித்தனர்.

Related posts: