வவுனியா உள்ளிட்ட மேலும் 3 மாவட்டங்களில் ஒருநாள் கடவுச்சீட்டு வழங்கும் சேவை முன்னெடுப்பு – அமைச்சர் தம்மிக்க பெரேரா!

Wednesday, June 29th, 2022

ஒரு நாள் சேவையின் (on days service) ஊடாக கடவுச்சீட்டு வழங்கும் செயற்பாடுகள் மேலும் 3 மாவட்டங்களில் முன்னெடுக்கப்படவுள்ளதாக அமைச்சர் தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, மாத்தறை, கண்டி மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களில் எதிர்வரும் திங்கட்கிழமை (4) முதல் ஒருநாள் கடவுச்சீட்டு வழங்கல் சேவைகள் முன்னெடுக்கப்படும் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

அண்மைய நாட்களாக, பத்தரமுல்லையில் உள்ள குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் பிரதான அலுவலகத்துக்கு நாளாந்தம் பெருமளவானோர் வருகைதந்தனர்.

இதன்காரணமாக இரண்டு சேவை முறைகளின் கீழ் ஒரு நாள் கடவுச்சீட்டு வழங்கல் சேவையை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டது.

இந்நிலையில், தற்போதைய எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில் மேலும் 3 மாவட்டங்களில் கடவுச்சீட்டு சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: