வவுனியாவில் 90 ஏக்கர் குடியேற்றம் செய்வதற்குரிய காணியினை விடுவிக்க நடவடிக்கை – ஈ.பி.டி.பியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன் தெரிவிப்பு!

வவுனியா பிரதேச செயலக பிரிவில், நிரந்தர காணிநிலங்களின்றி பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டுவந்த மக்களுக்கான குடியிருப்பு நிலங்களை வழங்குவதற்கான முயற்சிகளை முன்னெடுத்துள்ளதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைத்தலைவருமான குலசிங்கம் திலீபன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் –
இன்றையதினம் வவுனியா பிரதேச செயலாளர் கமலதாசன், வீடமைப்பு அதிகார சபையின் முகாமையாளர் திருமதி.வி.எம்.வி.குரூஸ், உதவி மாவட்ட வன வள திணைக்கள அதிகாரி .எம்.ஏ.நபீஸ் மற்றும் பிரதேசசபை உறுப்பினர்களுடன் நேரில் சென்று நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்ததுடன் அவர்களது பிரச்சினைகள் தொடர்பிலும் கேட்டறிந்துகொண்டோம்.
அத்துடன் குறித்த விடயம் தொடர்பில் ஆராய்ந்து, 90 ஏக்கர் காணியை வனவள தினைக்களத்தினரின் அனுமதியுடன் விடுவிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்நிலையில் குறித்த குடியிருப்பு மக்களுக்கு காணியுடன் வீட்டுத்திட்டமும் வழங்கும் நோக்கிலே இவ்வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் திலீபன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|