வவுனியாவில் சொகுசு பேருந்து விபத்து!

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் வந்த தனியார் சொகுசு பேருந்து, வவுனியா புளியங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு அருகில் இன்று(19) அதிகாலை விபத்துக்குள்ளாகியுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, மழை பெய்து கொண்டிருந்த போது அதிக வேகம் காரணமாக வீதியைவிட்டு விலகியதாலேயே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.எனினும் பேருந்தில் பயணம் செய்த எவருக்கும் காயம் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை புளியங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இலங்கை வைத்திய சபை அவசரமாக கூடுகிறது!
மீன்பிடிக்க கடலுக்குச் சென்ற குடும்பஸ்தர் ஐந்து நாட்களின் பின் சடலமாக மீட்பு!
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு முரண்பட்ட பல்கலை மாணவர்கள் பொன் சிவகுமாரனின் நினைவு தினத்தை திரும்ப...
|
|