வவுனியாவில் கோர விபத்து : இருவர் கவலைக்கிடம்!

Monday, July 30th, 2018

கொழும்பிலிருந்து யாழ். நோக்கி பயணித்த அரச பேருந்தும், முச்சக்கரவண்டியொன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் கவலைக்கிடமான நிலையில் உள்ளதுடன், எட்டு மாணவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
குறித்த விபத்து இன்று வவுனியா – புளியங்குளம் பகுதியின் புதூர் சந்தியில் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.
முச்சக்கரவண்டியின் சாரதியும், ஒரு மாணவருமே கவலைக்கிடமாக உள்ள நிலையில் மேலும் எட்டு பேர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முந்தி செல்ல முற்பட்ட போதே குறித்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதேவேளை குறித்த விபத்து இடம்பெற்ற போது முச்சக்கரவண்டியில் ஒன்பது மாணவர்கள் பயணம் செய்துள்ளதாக தெரியவருகிறது.
இலங்கை சட்டத்தின்படி ஒரு முச்சக்கரவண்டியில் மூன்று பயணிகளை மாத்திரமே ஏற்றிச் செல்ல முடியும். இந்த நிலையில் இங்கு விதிமீறல் இடம்பெற்றுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

Related posts: