வவுனியாவில் கோர விபத்து : 19 பேர் படுகாயம்!

Wednesday, July 25th, 2018

வவுனியா – பூனாவை பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற பேருந்து விபத்தில் 19 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
கொழும்பிலிருந்து புதுக்குடியிருப்பு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தே மரமொன்றுடன் மோதி விபத்திற்கு உள்ளாகியுள்ளது.
குறித்த விபத்தில் காயமடைந்த 19 பேரும் வவுனியா மாவட்ட பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சாரதியின் கட்டுப்பாட்டினை இழந்த பேருந்து வீதியை விட்டு விலகி இவ்வாறு விபத்திற்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

37837600_203147397208825_6430176885245739008_n

37732964_203147360542162_5275039546881343488_n

37720569_203147457208819_3239225851736227840_n

37770207_203147527208812_2492253776795140096_n

 

 

Related posts: