வவுனியாவிலும் கடுமையான பயணக் கட்டுப்பாட்டு !
Tuesday, May 25th, 2021வவுனியாவில் மோட்டார் சைக்கிள் தவிர்ந்த ஏனைய வாகனங்கள் மூலமாக நகருக்குள் பிரவேசிக்கும் பொதுமக்கள் பொலிசாரால் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர்.
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்குடன் நாடளாவிய ரீதியாக அமுல்படுத்தப்பட்டிருந்த பயணத்தடை இன்றுகாலைமுதல் தளர்த்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து வவுனியா நகருக்குள் நுளையும் பொதுமக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனையடுத்து நகரின் முக்கிய பகுதிகளில் கடமையில் ஈடுபட்டுவரும் பொலிசார், அவசியத்தேவை கருதி மோட்டார் சைக்கிள்களில் செல்வோரைத்தவிர்ந்த ஏனைய வாகனங்களில் பயணிக்கும் அனைவரையும் திருப்பி அனுப்பி வருகின்றனர்.
இதேவேளை வவுனியா நகரில் அத்தியவசிய உணவுப்பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் மற்றும் மருந்தகங்கள், போன்றவை திறந்திருப்பதுடன் ஏனைய வியாபாரநிலையங்கள் மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வெட்டுக்காயத்துடன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவரின் உறவினர்கள் தொடர்பு கொள்ளவும்!
யாழ். மாவட்டத்தில் கடற்றொழில்சார் முதலீடுகளுக்கு இலகு வழிமுறை!
அட்டைகள் பற்றாக்குறை - சாரதி அனுமதிப் பத்திரங்களை பெறுவதில் மக்கள் சிரமம்!
|
|