வழிப்பறி சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் யாழ்.மாவட்ட குற்றத்தடுப்புப் பொலிஸாரால் ஐவர் கைது!

Saturday, January 22nd, 2022

சுன்னாகம் மற்றும் இளவாலையில் பட்டப்பகலில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மூவரும், அவர்களிடம் நகைகளை கொள்வனவு செய்த இருவருமாக ஐவர் யாழ்.மாவட்ட குற்றத்தடுப்புப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களிடமிருந்து திருட்டு நகைகள் 7 பவுண் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வீதிகளில் செல்லும் பெண்களிடம் நகைகள் அபகரிக்கப்படுவது தொடர்பில் அண்மையில் சுன்னாகம் மற்றும் இளவாலை பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் செய்யப்பட்டன.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் மூத்த பொலிஸ் அத்தியட்சகருக்கு கீழான மாவட்டக் குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவு விசாரணைகளை முன்னெடுத்தது.

இதற்கமைய முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் புத்தூரைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 7 பவுண் தங்க நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேக நபர்களிடமிருந்து நகைகளை கொள்வனவு செய்த சுன்னாகம் மற்றும் யாழ்ப்பாணம் நகர நகைக்கடை உரிமையாளர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: