வழித்தட அனுமதியின்றி பயணித்த 25 பேருந்துகள் பறிமுதல் – தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தகவல்!

வழித்தட அனுமதிப்பத்திரம் இன்றி சேவையில் ஈடுபட்ட 25 பேருந்து சாரதிகளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நவம்பர் 1ஆம் திகதிமுதல் டிசம்பர் 13 ஆம் திகதி வரை பொலிஸாராலும், சம்பந்தப்பட்ட சுற்றிவளைப்புப் பிரிவினராலும் மேற்படி பஸ்கள் கைப்பற்றப்பட்டதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளரான நிலான் மிராண்டா தெரிவித்துள்ளார்.
குறித்த பேருந்துகள் வெள்ளவத்தையிலிருந்து யாழ்ப்பாணம், மன்னார், திருகோணமலை மற்றும் வவுனியா ஆகிய பகுதிகளுக்கு பயணிகளை ஏற்றிச் சென்றதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
தென்னாசிய நாடுகளுடனான வர்த்தக உடன்படிக்கைகளை விரிவுபடுத்த எதிர்பார்த்துள்ளோம் -பிரதமர்
புலமைப் பரிசில் பரீட்சையினை இரத்து செய்ய அரசு தீர்மானம்!
நாட்டில் அதிக மழைக்கு வாய்ப்பு - வளிமண்டலவியல் திணைக்களம் தகவல்!
|
|