வழிகாட்டி கையேடு வழங்கப்படவில்லை – ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு!

Wednesday, January 9th, 2019

இந்த ஆண்டுக்கான ஆசிரியர் வழிகாட்டல் கையேடு ஆசிரியர்களுக்கு இதுவரை வழங்கப்படவில்லை என, இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றஞ்சுமத்தியுள்ளது.

ஆரம்பப் பிரிவுக்கான அத்தியாவசிய கற்றல் திறன்விருத்திக் கையேடுகளும் வழங்கப்படவில்லை எனவும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அறிவதற்காக கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகத்தை தொடர்புகொள்வதற்கு மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: