வழமை நிலைக்கு திரும்பியது மாகாணங்களுக்கு இடையேயான பொதுப் போக்குவரத்து சேவை– அதிக பயணிகளை ஏற்றிச் செல்லும் பேருந்துகளின் அனுமதிப்பத்திரங்கள் கைப்பற்றப்படும் எனவும் எச்சரிக்கை!
Monday, November 1st, 2021மாகாணங்களுக்கு இடையேயான பேருந்து மற்றும் புகையிரத சேவைகள் இன்றுமுதல் மீண்டும் ஆரம்பித்துள்ளதாக முன்னெடுக்கப்படவுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சரான திலும் அமுனு கம தெரிவித்துள்ளார்.
அத்துடன் இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான 6, ஆயிரம் பேருந்துகள் இன்றுமுதல் சேவையில் ஈடுபடவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை இன்றுமுதல் 152 அலுவலக புகையிரதங்கள் சேவையில் ஈடுபடுத்தப்படுவதுடன், நெடுந்தூர புகையிதங்கள் நவம்பர் 5 ஆம் திகதிமுதல் முன்னெடுக்கப்படவுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சரான திலும் அமுனு கம தெரிவித்துள்ளார்..
அத்துடன் புகையிரத பயணிகளுக்கான பயணச்சீட்டுகள் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்தை மீள ஆரம்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனவே இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்துகள், தனியார் பேருந்துகள் அனைத்தையும் இயங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டு வழமையான கால அட்டவணையின் கீழ் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை பல்வேறு கோரிக்கைகள் இருந்தாலும் தனியார் துறையினர் பேருந்து சேவையை முன்னெடுக்க வேண்டும் என்றும் அமைச்சர் கேட்டுக் கொண்டார்.
பயணிகளை இருக்கை அளவுக்கமைய மாத்திரம் ஏற்றிச் செல்ல வேண்டும் என்ற விதிமுறையை கண்டிப்பாக கடைப்பிடிக்குமாறும் அனைத்து பேருந்து உரிமையாளர்களையும் இராஜாங்க அமைச்சர் கேட்டுக்கொண்டார்.
அதேநேரம் இருக்கை கொள்ளளவுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றிச் செல்லும் பேருந்துகளின் அனுமதிப்பத்திரங்கள் இன்றுமுதல் கைப்பற்றப்படும் எனவும் அவர் மேலும் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|