வழமைக்கு திரும்புகிறது அனைத்து பாடசாலைகளிலும் வகுப்புக்கான கால நேரம் – கல்வி அமைச்சு அறிவிப்பு!

அனைத்து அரச பாடசாலைகளிலும், சில வகுப்புக்களுக்கான கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான நேரம் முன்னர் நடைமுறையிலிருந்தது போலவே வழமைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது என கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இலங்கையில் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருந்த நிலையில் அண்மையில் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.
இதனையடுத்து பல்வேறு சுகாதார வழிமுறைகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்ததுடன், ஒவ்வொரு வகுப்புக்களுக்கும் வெவ்வேறு கால நேரங்கள் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தன.
இவ்வாறான நிலையில் எதிர்வரும் செப்டெம்பர் 2 ஆம் திகதிமுதல் சில வகுப்புகளுக்கான கால நேரம் வழமைக்கு கொண்டுவரப்படவுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி ஆண்டு 10, 11, 12 மற்றும் 13ஆம் வகுப்பு மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் தினமும் காலை 7.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை இடம்பெறும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனினும் இதுவரை 10, 11, 12 மற்றும் 13ஆம் வகுப்பு மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் இதுவரை காலை 7.30 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை இடம்பெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|