வழமைக்கு திரும்பியது நுரைச்சோலை அனல் மின்நிலையம்!  

Tuesday, October 25th, 2016

நுரைச்சோலை அனல் மின்நிலையத்தின் செயற்படாமல் இருந்த மற்றுமொரு இயந்திரம் மீண்டும் செயற்பட ஆரம்பித்திருப்பதாக மின்சக்தி எரிசக்தி அமைச்சு  தெரிவித்துள்ளது.

இந்த அனல் மின்நிலையத்தில் உள்ள மூன்று இயந்திரங்களும் சமீபத்தில் செயலிழந்தன. இதில் இரண்டு இயங்கி வந்த நிலையில் தற்பொழுது மூன்றாவது இயந்திரமும் செயற்பட ஆரம்பித்துள்ளது. இதனால் 300 மெஹாவோட்ஸ் மின்சாரம் தேசிய மின்வலைப்பின்னலுடன் ஒன்றிணைக்கப்பட்டு நாட்டில் மின்வெட்டினை நீக்க முடிந்துள்ளது என்று அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்சன ஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.

c469bafeb90b97ef9b267e00b4aff073_L

Related posts: