வழமைக்கு திரும்பியது நாடு – அனைத்து அரச ஊழியர்களும் இன்று முதல் கடமைக்கு!

சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய இன்றையதினம்முதல் அனைத்து அரச பணியாளர்களும் வழமைப்போன்று அரச பணிகளில் ஈடுபடுட்டுள்ளனர்.
ஜனாதிபதியின் செயலாளரால், அரச சேவைகள், மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறிக்கு விடுக்கப்பட்ட அறிவுறுத்தல் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கொவிட் பரவல் கட்டுப்பாட்டு நோக்கில், அரச பணியாளர்களை சுழற்சி முறையிலும், வரையறைக்கு உட்பட்ட அளவிலும் அழைத்து பணி செய்விக்கும் வகையில் விடுக்கப்பட்ட சுற்றுநிருபங்கள் அனைத்தும் இரத்து செய்யப்பட்டுள்ளன.
அதேநேரம், சகல அரச பணியாளர்களையும் வழமைப் போன்று சேவைக்கு அழைப்பதற்கான சுற்றுநிருபத்துக்கு அமைய, கல்விசார்ந்த துறையினரும் செயற்பட வேண்டும் என்று கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா இதுதொடர்பான கடிதங்களை உரிய தரப்புக்கு அனுப்பி வைத்துள்ளார்.
இதற்கு மேலதிகமாக அனைத்து மாகாண கல்வி திணைக்களங்கள், வலைய மற்றும் கோட்ட கல்வி அதிகாரிகளும் தங்களது பணிகளுக்கு திரும்ப வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது..
Related posts:
|
|