வழங்கப்பட்ட தண்ணீர் பவுசர்களுக்கு ஒப்பந்தம் எழுதப்பட்டது ஏன்? – சபை உறுப்பினர்கள் கேள்வி!

Wednesday, March 27th, 2019

அனர்த்த முகாமைத்தவ திணைக்களத்தால் சபைகளுக்கு வழங்கப்பட்ட தண்ணீர் பவுசர்களுக்கு ஒப்பந்தம் எழுதப்பட்டு வழங்கப்பட்டமை தொடர்பில் சபை உறுப்பினர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள உள்ளூராட்சி சபைகளுக்கு வறட்சி காலத்தில் குடிதண்ணீர் வழங்குவதற்காக வழங்கப்பட்ட தண்ணீர் பவுசர்கள் எந்த நேரத்திலும் மீளவும் செயலகங்களுக்கு ஒப்படைக்கப்படக் கூடிய வகையில் ஒப்பந்தம் எழுதப்பட்டு வழங்கப்பட்டது. இது எதற்காக என்று சபை உறுப்பினர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இது தொடர்பில் சபை உறுப்பினர்கள் தெரிவித்ததாவது –

இடர் முகாமைத்துவ அமைச்சால் வறட்சியான காலத்தில் குடிதண்ணீர் சேவையை சிறப்பாக மேற்கொள்வதற்கு உள்ளூராட்சி சபைகள் சிலவற்றுக்கு 15 ஆயிரம் லீட்டர் கொள்ளக்கூடிய தண்ணீர் பவுசர்கள் அண்மையில் வழங்கப்பட்டன.

அவை குறித்த உள்ளூராட்சி சபைகளின் சாரதிகள் ஊடாக கொழும்பில் இருந்தும் எடுத்து வரப்பட்டு மாவட்டச்செலகம் ஊடாக பின்னர் உள்ளூராட்சி சபைகளுக்கு வழங்கப்பட்டன.

அதன் பராமரிப்பு, பழுது பார்க்கும் செலவுகள் அனைத்தும் அந்தந்த உள்ளூராட்சி சபைகளையே சாரும்.

இவ்வாறு வழங்கப்பட்ட தண்ணீர்ப்பவுசர்கள் எந்த நேரத்திலும் மீளவும் மாவட்ட மற்றும் பிரதேச செயலகத்தால் கேட்க்கப்பட்டால் சபைகள் ஒப்படைக்கப்பட வேண்டும் என்ற ஒப்பந்தத்தின் கீழ் பிரதேச செயலக பதிவின் கீழ் வழங்கப்பட்டுள்ளது.

பிரதேச குடிதண்ணீர் சேவைக்காக எமது பராமரிப்பின் கீழ் தரப்பட்ட பவுசர்கள் எந்த நேரத்திலும் செயலகங்கள் கேட்டால் ஒப்படைக்க வேண்டும் என்ற நிலை காணப்படுகின்றது.

வருடத்தில் குறித்த பவுசருக்க ஏற்படும் மேய்மான மற்றும் பழுது பார்க்கும் செலவுக்கு சொந்தமாக ஒரு பவுசரைப் பெற்றுக்கொள்ளலாம் – என்றனர்.

Related posts:

உள்நாட்டு கைத்தொழிலாளர்களை பாதிக்கும் எந்தவொரு உடன்படிக்கைகளும் கைச்சாத்திடப்படாது - ஜனாதிபதி!
பலாலி சர்வதேச விமான நிலைய அபிவிருத்தி தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் அமைச்சரவை அனுமதிக்காக முன்வைக...
இணைந்த நேர அட்டவணை செயற்பாடுகளுக்கு இலங்கை போக்குவரத்து சபையின் வவுனியா சாலையினர் ஒத்துழைக்கவில்லை ...