வழக்கு விசாரணைகளில் அரசாங்கம் ஒருபோதும் தலையிடாது – அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!

Saturday, September 26th, 2020

நீதிமன்றத்தில் இடம்பெறும் வழக்குகள் தொடர்பில் நீதியமைச்சோ அல்லது அரசாங்கமோ ஒருபோதும் தலையிடாதென நாடாளுமன்றத்தின் நேற்றைய அமர்வின் போது நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

அத்துடன் நேற்றைய அமர்வின் போது அமைச்சர் சமல் ராஜபக்ஷவும் இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ளார்.

கேகாலை மாவட்டத்தின் எட்டியாந்தோட்ட பிரதேச செயலகப் பிரிவில் வி-ஒய என்ற பேரில் நீர்த்தேக்கம் ஒன்றை அமைக்க திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த நீர்த்தேக்கத்தின் மூலம் கம்பஹா, கேகாலை ஆகிய மாவட்டங்களுக்கு குடிநீர் வழங்க எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் சமல் ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: