வளிமண்டல தாழமுக்கம் மேற்கு நோக்கி நகர்வு!

தென்கிழக்கு வங்கக் கடலில் உருவான வளிமண்டல தாழமுக்கம் மேற்கு நோக்கி நகர்ந்து சென்றுள்ளதாக சென்னை வானிலை நிலையம் தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மேலும் வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியிருப்பதாகவும் இந்த புயல் சின்னம், மத்திய மேற்குவங்கக் கடல் பகுதியை நோக்கி நகர்ந்து வருகிறது என்றும் நிலையம் அறிவித்துள்ளது.
இதனால் இந்தியாவில் ஆந்திராவில் மிக கன மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆந்திராவில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் இன்னும் 2 நாட்கள் மழை நீடிக்கும். இன்று இடியுடன் கூடிய மழை பெய்யும். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடலோர பகுதிகளில் பெரும்பாலான இடங்களில், குறிப்பாக வட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. உள் மாவட்டங்களில் சில இடங்களிலும் இன்று மழை பெய்யும். சென்னையில் சிலஇடங்களில் அடிக்கடி மழை பெய்யும் அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று சென்னை வானிலை மேலும் தெரிவித்துள்ளது.
Related posts:
|
|