வளிமண்டலவியல் திணைக்களம் கடற்றொழிலாளர்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை!

Saturday, November 21st, 2020

எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் தெற்கு வங்காள விரிகுடாவில் குறைந்த வளிமண்டலவியல் அமுக்கம் உணரப்படக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளது.

இதனால், நாட்டின் கிழக்கு மற்றும் வடக்கு கடற்பகுதிகளில் கடல் அலையின் சீற்றம் அதிகமாக காணப்படும் எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

எனவே, வடக்கு மற்றும் கிழக்கு கடற்பகுதிகளில் மீனவர்கள் எதிர்வரும் திங்கட்கிழமை வரை கடற்றொழிலில் ஈடுப்பட வேண்டாம் என அந்த திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Related posts: