வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள குழப்பம் – நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!

Wednesday, April 13th, 2022

வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலை காரணமாக இன்று (13) நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

வடக்கு, கிழக்கு, வட மத்திய,மேல் மற்றும் ஊவா மாகாணங்களின் சில பகுதிகளில் 75 மில்லி மீட்டர் வரை மழை பெய்யலாம் எனவும் திணைக்களம் கூறியுள்ளது.

ஏனைய பகுதிகளில் 50 மில்லி மீட்டருக்கும் அதிக மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டளவியல் திணைக்களம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: