வளலாய் அமெரிக்கன் மிஷன் முன்பள்ளிக்கு தளபாடங்கள் வழங்கிவைப்பு!

அச்சுவேலி வளலாய் அமெரிக்கன்மிஷன் பாடசாலையில் இயங்கும் முன்பள்ளிக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் வலிகாமம் கிழக்கு நிர்வாக செயலாளர் இராமநாதன் ஐங்கரன் அவர்களது முயற்சியினால் தளபாடங்கள் வழங்கிவைக்கப் பட்டுள்ளது.
குறித்த முன்பள்ளியின் நிர்வாகத்தினர் கட்சியின் வலிகாமம் கிழக்கு பிரதேச நிர்வாக செயலாளர் ஐங்கரன் அவர்களிடம் விடுத்திருந்த கோரிக்கைக்கு அமைவாக அவுஸ்ரேலியாவில் வசிக்கும் நிர்த்தனகுமாரன் இராஜேஸ்வரி தம்பதிகளின் நிதிப்பங்களிப்பின் மூலம் இன்றையதினம்(20) குறித்த முன்பள்ளி சிறார்களிற்கான தளபாடங்கள் கையளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் வளலாய் மீள்குடியேற்றச் சங்கத் தலைவா் சின்னத்துரை செல்வரத்தினம், வாழ்வின் எழுச்சி உத்தியோகத்தரும், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் வலிகாமம் கிழக்கு பிரதேச நிர்வாகக் குழு உறுப்பினருமான மாணிக்கம் சந்திரசேகரன் மற்றும் முன்பள்ளி ஆசிரியர்கள், முன்பள்ளி நிர்வாகத்தினா்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
Related posts:
|
|