வல்வெட்டித்துறை நகர சபையின் பாதீடு இரண்டாவது தடவையும் தோல்வி – பதவி இழக்கும் நிலையில் தவிசாளர்!

Tuesday, November 30th, 2021

வல்வெட்டித்துறை நகர சபையின் பாதீடு இரண்டாம் முறையும் இன்றையதினம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

வல்வெட்டித்துறை நகர சபை பாதீட்டு கூட்டம் இன்றையதினம் செவ்வாய்கிழமை தவிசாளர் செல்வேந்திரா தலைமையில் நடைபெற்றது.

இதன்போது கடந்த 17 ஆம் திகதி சபையில் முன்வைக்கப்பட்ட பாதீடு தோற்கடிக்கப்பட்ட நிலையில், இன்றையதினம் திருத்தங்களுடன் சபையில் முன்வைக்கப்பட்ட போதும் அதுவும் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

வல்வெட்டித்துறை நகர சபையின் முன்னாள் தவிசாளார் கருணாந்தராசா கொரோனா தொற்றுக்கு உள்ளாகி கடந்த ஆகஸ்ட் மாதம் 11 ஆம் திகதி உயிரிழந்தார்.

இதனை அடுத்து புதிய தவிசாளராக செல்வேந்திரா கடந்த செப்டெம்பர் மாதம் 22 ஆம் திகதி ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார்.

இந்நிலையில் புதிய தவிசாளரினால் முன்வைக்கப்பட்ட இரு பாதீடும் தோல்வியடைந்துள்ளதுள்ளமையால் அவர் பதவியும் இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:


மத்திய அரசின் பூரண அனுசரணையை கொண்டுள்ள கூட்டமைப்பினரால் ஏன் தமிழ் மக்களுக்கான தேவைகளை பெற்றுக்கொடுக்...
சர்வதேச ரீதியில் வேலை வாய்ப்பினை பெறுவதற்கு நடவடிக்கை -விஞ்ஞான தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி அமைச்...
ஆசிய - பசுபிக் வலய அமைச்சர்கள் மற்றும் சுற்றாடல் அதிகாரிகளின் ஐந்தாவது கலந்துரையாடல் கொழும்பில்!