வல்வெட்டித்துறையில் 2 பிள்ளைகளின் தந்தை கொலை!

Tuesday, August 17th, 2021

வல்வெட்டித்துறை வல்வெட்டியில் குடும்பத் தகராறு காரணமாக 2 பிள்ளைகளின் தந்தை கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

இன்று (17) அதிகாலை 12.30 மணிக்கு இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்தில் படுகாயடைந்த அவரை உடனடியாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்று அனுமதித்த போது அவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் 30 வயதுடைய சுப்பிரமணியம் கிருசாந்தன் என்ற 2 பிள்ளைகளின் தந்தையே கொல்லப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் வல்வெட்டித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: