வலுவான பொருளாதாரத்திற்கு புதிய முதலீட்டுகள் அவசியம் – பிரதமர்

Wednesday, August 9th, 2017

நாட்டின் வலுவான பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு புதிய தொழிற்சாலைகளும், புதிய முதலீட்டு வாய்ப்புக்களும் ஏற்படுத்தப்படுவது அவசியம் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

களுத்துறை, கண்டி மாவட்டங்களையும், வடமேல் மாகாணத்தையும் இலக்காகக் கொண்டு மூன்று வர்த்தக வலயங்கள் ஸ்தாபிக்கப்படவிருக்கின்றன என்றும் பிரதமர் கூறினார்.

அம்பேவெல பால் உற்பத்தித் தொழிற்சாலையை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு  உரையாற்றுகையிலேயே பிரதமர் இவ்வாறு குறிப்pபட்டார். அந்த நிகழ்வு கடந்த 6 ஆம் திகதி இடம்பெற்றது.

கடனை செலுத்தக்கூடிய வலுவான பொருளாதாரம் கட்டியெழுப்பப்படும். கடந்த ஆண்டில் 135 லட்சம் கோடி ரூபா கடனாக செலுத்தப்பட்டது. இந்த ஆண்டு 200 லட்சம் கோடியே கடனாக செலுத்த வேண்டியிருப்பதாகவும் அவர் கூறினார். 2020ஆம் ஆண்டு வரை கடனை செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது என்றும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

வலுவான பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு புதிய தொழிற்சாலைகளும், புதிய முதலீட்டு வாய்ப்புக்களும் ஏற்படுத்தப்படுவது அவசியமாகும். ஏற்றுமதி பொருட்களின் எண்ணிக்கையை அதிகரிக்க ஜி.எஸ்.பி சலுகையை வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ள முடியும். ஹம்பாந்தோட்டை துறைமுக ஒப்பந்தத்தின் மூலம் ஒன்று தசம் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைக்கவிருக்கின்றன. இதனை மத்திய வங்கியில் வைப்பிலிடுவதன் மூலம் வெளிநாட்டு ஒதுக்கத்தை அதிகரிக்கலாம்  பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்தார்.

Related posts: