வலுவடையும் “வர்தா” புயல்..! எச்சரிக்கை!!

Saturday, December 10th, 2016

இலங்கையின் தென்கிழக்கு திசையில் திருகோணமலையிலிருந்து சுமார் 1100 கிலோ மீற்றர் தொலைவில் நிலைகொண்டுள்ள ‘வர்தா’ புயல் மேலும் வலுவடைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வானிலை அவதான நிலையம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. இலங்கையின் வட மேல் மாகாண பகுதியை நோக்கி நகர்வதாகவும் புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை, பொத்துவில் வரை கடல் பகுதியில் மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், தற்போது காற்றின் வேகம் 30 முதல் 40 கி.மீ வேகத்தில் வீசுவதுடன் மேலும் காற்றின் வேகம் அதிகரிக்கும் என்றும் வானிலை அவதான நிலையம் தெரிவிக்கிறது.இதேவேளை, வங்க கடலில் உருவாகியுள்ள வார்தா புயல் குறித்து தகவல் வெளியிட்டுள்ள சென்னை வானிலை ஆய்வு மையம்,

தென்கிழக்கு வங்க கடலில் பகுதியில் நிலை கொண்டிருந்த வர்தா புயல் இன்று காலை விசாகப்பட்டினத்திற்கு தென் கிழக்கே 990 கி.மீ. தூரத்தில் நிலை கொண்டுள்ளதாகவும் இது கடந்த 2 நாட்களாக மணிக்கு 2 கி.மீ. தூரத்தில் மட்டுமே மெதுவாக நகர்ந்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது.

இந்த புயல் வடமேற்கு திசையில் நாளை 10ஆம் திகதி மற்றும் 11ஆம் திகதிகளில் நகரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த புயல் 12ஆம் திகதி மாலை கர்நாடகத்தின் நெல்லூருக்கும் காக்கி நாடாவிற்கும் இடையே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கரையை கடக்கும் முன் இந்த புயல் சற்று வலுவிழக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது என அந்த மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

545454_09122016_kaa

Related posts:


இந்திய வர்த்தக நிறுவனங்களின் தலைவர்களுக்கு அமைச்சர் தம்மிக்க பெரேராவினால் 5 வருட விசா கையளிப்பு - இந...
தொழிற்சங்க நடவடிக்கையே எரிபொருள் விநியோக தாமதத்திற்கு காரணம் - மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை - போ...
புதிய தேசிய அடையாள அட்டை இல்லாத விண்ணப்பதாரர்களுக்கு கடவுச் சீட்டுகள் வழங்கப்படாது – குடிவரவு குடியக...