வலுப்பெற்றும் காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக நாளை புயலாக வலுப்பெறும் – வானிலை அவதான நிலையம் எச்சரிக்கை!

Saturday, December 2nd, 2023

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புக்கு மேலாக விருத்தியடைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நேற்றையதினம் திருகோணமலைக்கு வடகிழக்கே சுமார் 490 கிமீ தொலைவில் நிலைகொண்டுள்ளது.

இது அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, புயலாக வலுப்பெறவுள்ளது.

இந்த புயல் இலங்கையின் வடக்கு கடற்கரைக்கு அருகில் மேற்கு – வடமேற்கு திசையில் இந்தியாவின் வட தமிழக கடற்கரையை நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.

நாட்டின் ஏனைய மாகாணங்களில் பிற்பகலுக்கப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். தென் மற்றும் மேல் மாகாணங்களில் காலை வேளையிலும் மழை பெய்யக்கூடும்.

வடக்கு, வடமத்திய, வடமேற்கு மற்றும் தென் மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:


சந்தர்ப்பங்களை தவறவிடும் போக்கிலிருந்து தமிழ் மக்கள் இன்னமும் மாறாதிருப்பது கவலைக்குரியது – தோழர் ஜீ...
உயிர்த்த ஞாயிறு அறிக்கை குறித்து அமைச்சரவையில் கலந்துரையாட விசேட தினம் - அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்...
கருத்துச் சுதந்திரம் என்ற போர்வையில் அமைதியின்மைக்கு இடமளிக்க வேண்டாம் - மேற்கத்தேய நாடுகளிடம் ஜனாத...