வலி. வடக்கு எரிபொருள் நிரப்பு நிலையம் விடுவிப்பு!
Wednesday, August 10th, 2016
வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தில் இராணுவத்தின் வசமிருந்து விடுவிக்கப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையம் தெல்லிப்பளை பிரதேச செயலாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
குறித்த எரிபொருள் நிரப்பு நிலையம் பொதுமக்களின் கோரிக்கைக்கு அமைவாக இன்று (10) தெல்லிப்பளைப் பிரதேச செயலாளரிடம் ஒப்படைக்கப்பட்டதுடன், குறித்த நிலையம் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, காங்கேசன்துறை பேருந்து தரிப்பு நிலையமானது 27 வருடங்களிற்கு பின்னர் கடந்த ஜூன் மாதம் 26 ஆம் திகதி சொந்த இடத்திற்கு சென்றுள்ளதுடன், காங்கேசன்துறை புகையிரத நிலையத்திற்கு அண்மையிலுள்ள பழைய பேருந்து தரிப்பிடத்திற்கு செல்வதற்கு அனுமதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
முன்னாள் அமைச்சர்களின் பாதுகாப்பு குறைப்பு!
சித்திரவதை தொடர்பில் 50 பிரிவினரின் விபரங்கள் - யஸ்மின் சூக்கா அமைப்பு!
24 புள்ளிகளை பெற்றால் சாரதி அனுமதிப்பத்திரம் இரத்து - வெளியியான முக்கிய அறிவிப்பு!
|
|