வலி.வடக்கில் 30 ஏக்கர் காணி விடுவிப்பு!

Saturday, March 2nd, 2019

வலி.வடக்கு பிரதேச செயலர் பிரிவில் 30 ஏக்கர் காணி மற்றும் மக்கள் பாவனைக்குரிய வீதி ஒன்றும் நாளை மறுதினம் திங்கட்கிழமை விடுவிக்கப்படவுள்ளது.

மயிலிட்டித்துறை வடக்கு, மயிலிட்டி வடக்கு ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளில் மக்கள் காணிகளும், பலாலி கிழக்கில் முதன்மை வீதி ஒன்றும் விடுவிக்கப்படவுள்ளன.

தெல்லிப்பழை பிரதேச செயலர் எஸ்.சிவசிறியிடம் நாளை மறுதினம் திங்கட்கிழமை மாலை 3 மணிக்கு இராணுவத்தினர் காணி விடுவிப்புக்கான பத்திரத்தை ஒப்படைக்கவுள்ளனர்.

விடுவிக்கப்படவுள்ள காணிகளில் அமைந்துள்ள இராணுவ முகாம்களை அகற்றும் நடவடிக்கையில் இராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.

Related posts: