வலி.வடக்கில் மக்களின் கடும் எதிர்ப்பால் கைவிடப்பட்டது காணிச் சுவீகரிப்பு !

வலி. வடக்கு சேந்தான் குளம் பகுதியில் தேவாலயத்துக்குச் சொந்தமான நான்கு பரப்புக் காணியைக் கடற்படையினரின் தேவைகளுக்காகச் சுவீகரிக்கும் வகையில் இன்று செவ்வாய்க்கிழமை (08-03-2016) காலை நில அளவைத் திணைக்களத்தினர் அளவீடு செய்ய எடுத்த முயற்சி மக்களின் கடும் எதிர்ப்பால் கைவிடப்பட்டது.
கடந்த ஆட்சி காலத்தின் போது யாழ்.மாவட்டம் மாத்திரமன்றி வடக்கின் ஏனைய மாவட்டங்களிலும் இராணுவத்தினரின் தேவைகளுக்காகக் காணிகளைச் சுவீகரிக்கும் சுவீகரிப்பதற்காக அளவீட்டு பணிகள் முன்னெடுக்கப்பட்ட போது மக்களினதும்,அரசியல் வாதிகளினதும் கடும் எதிர்ப்பினால் காணி அளவீடு செய்யும் பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டு இருந்தன.
இந் நிலையில் தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னரும் கூட மீண்டும் குறித்த காணியினைச் சுவீகரிப்பதற்காக அளவீடு செய்யும் பணிகள் இடம்பெற்ற நிலையில் மக்களின் கடும் எதிர்ப்பால் நில அளவை செய்யும் பணிகள் இடைநிறுத்தப்பட்டன.
Related posts:
|
|