வலி. வடக்கில் பலாலி, தையிட்டிப் பகுதிகளில் குடிநீர்த் தட்டுப்பாடு !

Friday, March 10th, 2017

வலி. வடக்கில் மீள்குடியேறிய பலாலி தெற்கு, தையிட்டி தெற்கு ஆகிய பகுதிகளில் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக மேற்படி பகுதி  மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

குறித்த பகுதிகளில் மூன்று நாட்களுக்கு ஒரு தடவையே நீர் விநியோகம் இடம்பெறுவதாகக் குற்றம் சாட்டியுள்ள பொதுமக்கள்

வலி.வடக்குப் பிரதேச சபையால் விநியோகிக்கப்படும் நீர் மக்களின் தேவைகளுக்குப் போதுமானதாகக் காணப்படவில்லை எனவும் தெரிவித்தனர்.

தமது நீர்த் தேவையைப் பூர்த்தி செய்ய உரிய அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Related posts: