வலி மேற்கு மக்களின் தேவைப்பாடுகள் குறித்து ஈ.பி.டி.பியின் ஆலோசனை சபை கூட்டத்தில் விஷேட ஆராய்வு!

35076813_997854310364243_6325906658530689024_n Monday, June 11th, 2018

வலிகாமம் பிரதேச சபைக்குட்பட்ட மக்களின்  அடிப்படை தேவைப்பாடுகளை முன்னுரிமை அடிப்படையில் பெற்றுக்கொடுப்பது தொடர்பில் விஷேட கலந்துரையாடல் ஒன்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வலி மேற்கு பிரதேச ஆலோசனை சபையால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த ஆலோசனை சபைக் கூட்டம் வட்டுக்கோட்டை சித்தன்கேணி உள்ள கட்சியின் அலுவலகத்தில் இடம்பெற்றது.

இதன்போது வலிமேற்கு பிரதேசசபை கூட்டத்தொடரில் இடம்பெற்ற பிரேரணைகள் தொடர்பில் ஆராயப்பட்டதுடன் வலிகாமம் மேற்கு பிரதேசத்திலுள்ள தெரு விளக்கு பொருத்தல் மற்றும் சீரமைக்கப்பட வேண்டிய வீதிகள் தொடர்பிலும் அவற்றை முன்னுரிமை அடிப்படையில் மேற்கொள்ளப்பட வேண்டிய இடங்கள் குறித்தும் ஆராயப்பட்டன.

மேலும் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீடு தொடர்பில் முன்னெடுக்கப்பட வேண்டிய திட்டங்கள் தொடர்பில் ஆராயப்பட்டதுடன் வீட்டுத்திட்டம் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளரும், வலிகாமம் பிரதேச ஒருங்கிணைப்பாளருமான சிவகுரு பாலகிருஸ்ணன் தலைமையில் நடைபெற்ற குறித்த ஆலோசனை கூட்டத்தில் பிரதேச நிர்வாக செயலாளர் செல்வக்குமார் உடனிருந்தார்.