வலி.மேற்குப் பிரதேச செயலகத்தை இடம்மாற்றக் கோரிக்கை!

Tuesday, January 22nd, 2019

வலி.மேற்குப் பிரதேச செயலகத்தை பிறிதொரு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தற்போது இயங்கும் பிரதேச செயலகக் கட்டடத்தின் சூழல் இடஅமைவு நெருக்கடி மிக்கதாக உள்ளது என்றும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

வலிகாமம் மேற்குப் பிரதேச செயலகம் 230 க்கும் மேற்பட்ட ஆளணியைக் கொண்டது. எனினும் அதற்கமைவாகப் பிரதேச செயலகக் கட்டடம் காணப்படவில்லை. கட்டடம் சரியான முறையில் அமையாததால் நிர்வாகக் கட்டமைப்பிலும் சிக்கல்கள் காணப்படுகின்றன.

அத்துடன் வாகனத்தரிப்பிட வசதிகளும் இல்லை. வலி.மேற்குப் பிரதேச செயலகம் போக்குவரத்து வசதிகள் கொண்ட பரந்த விஸ்தீரணத்தில் எதிர்காலத் தேவைக்கேற்றவாறான கட்டடத்தை அமைத்துக்கொண்டு நகருவது சிறந்த கருத்திட்டமாக அமையும் என்று சுட்டிக்காட்டப்படுகின்றது.

அதேவேளை இந்த விடயம் தொடர்பாக பொதுமக்கள், கல்வியியலாளர்கள், பொது அமைப்புப் பிரதிநிதிகள் கொண்ட குழு விரைவில் மாவட்டச் செயலரைச் சந்திக்கவுள்ளது என்றும் இந்தத் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினருக்கும் விடயங்களை முன்னிறுத்தத் தயாராகியுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.

Related posts: