வலி தெற்கு பிரதேசத்தின் அபிவிருத்தி குறித்து ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி ஆராய்வு!

Monday, June 11th, 2018

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வலி தெற்கு பிரதேசத்தின் ஆலோசனை சபை  உறுப்பினர்கள் தமது பிரதேசத்தின் அபிவிருத்தி மற்றும் தேவைப்பாடுகள் தொடர்பில் கூட்டமொன்றை நடத்தியுள்ளனர்.

இதன்போது வலி தெற்கு பிரதேச சபையின் கூட்டத் தொடரில் இடம்பெற்ற பிரேரணைகள் தொடர்பில் ஆராய்ந்துகொண்டதுடன் பிரதேச சபை ஊடாக மேற்கொள்ளப்பட்டுவரும் தெரு விளக்கு பொருத்தல், வீதி திருத்தம் உள்ளிட்ட விடயங்கள் ஆராயப்பட்டதுடன் அவற்றை தேவைகளின் அடிப்படையில் முன்னுரிமைப்படுத்தும்  தெரிவுகளையும் மேற்கொண்டிருந்தனர்.

அத்துடன் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் பன்முகப்படுத்தப்பட்ட ஒதுக்கீட்டு நிதியினூடாக மேற்கொள்ளப்படவேண்டிய தேவைப்பாடுகள் தொடர்பிலும் வீட்டுத்திட்டம் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளரும், வலிகாமம் பிரதேச ஒருங்கிணைப்பாளருமான சிவகுரு பாலகிருஸ்ணன் தலைமையில் நடைபெற்ற குறித்த ஆலோசனை கூட்டத்தில் பிரதேச நிர்வாக செயலாளர் வலன்ரயன் மற்றும் உதவி நிர்வாக செயலாளர் அரிகரன் ஆகியோர் உடனிருந்தனர்.

Related posts: