வலி கிழக்கு பிரதேச வட்டார நிர்வாக செயலாளர்களுடன் ஈ.பி.டி.பின் முக்கியஸ்தர்கள் கலந்துரையாடல்!

Monday, March 6th, 2017

வலிகாமம் கிழக்கு பகுதியின் வட்டார நிர்வாக செயலாளர்களை ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் முக்கியஸ்தர்கள் சந்தித்து கட்சியின் எதிர்கால அரசியல் செயல்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடல் மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவினால் கடந்த காலங்களிலும் தற்போது முன்னெடுக்கப்பட்ட மற்றும் முன்னெடுக்கப்படவுள்ள செயற்றிட்டங்கள் தொடர்பாகவும் பிரதேசத்தில் உருவாக்கப்பட்டுள்ள புதிய வட்டார ரீதியான கட்டமைப்பு தொடர்பாகவும் அதனூடாக எதிர்காலத்தில் மேற்கொள்ளவுள்ள பணிகள் தொடர்பாகவும் கட்சியின் குறித்த பிரதேச வட்டார நிர்வாக உறுப்பினர்களுடன் கட்சியின் முக்கியஸ்தர்கள் கலந்துரையாடியுள்ளனர்..

நேற்றையதினம் (05) வலிகாமம் கிழக்கு நிர்வாக செயலாளர் இராமநாதன் ஐங்கரன் அவர்களின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இச்சந்திப்பின் போபோது கட்சியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம், கட்சியின் யழ் மாவட்ட நிர்வாக செயலாளர் கா வேலும்மயிலும் குகேந்திரன், கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் சிவகுரு பாலகிருஸ்ணன்,  கட்சியின் யாழ் மாவட்ட மேலதிக நிர்வாக செயலாளர் ஐயாத்துரை ஶ்ரீரங்கெஸ்வரன், கட்சியின் சர்வதேச முக்கியஸ்தர் விந்தன், கட்சியின் யாழ் மாவட்ட அலுவலக நிர்வாக செயலாளர் வசந்தன், கட்சியின் வலிகாமம் தெற்கு பிரதேச நிர்வாக செயலாளர் வலன்ரயன்  மற்றும் பிரதேச நிர்வாக உறுப்பினர்கள் உடனிருந்தனர்.

17098225_627376017461262_5499308821934032503_n

Related posts: