வலி கிழக்கு பிரதேச நிர்வாக செயலாளர் இராமநாதன் ஐங்கரன் அவர்களின் தந்தையாருக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் அஞ்சலிகள்!

Monday, May 2nd, 2016

நேற்றைய தினம் அமரத்துவம் அடைந்த ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் கோப்பாய் பகுதி நிர்வாக செயலாளரும் முன்னாள் வலிகாமம் கிழக்கு பிரதேச சபை எதிர்க்கட்சி தலைவருமான இராமநாதன் ஐங்கரன் அவர்களின் அன்புத் தந்தையார் பொன்னம்பலம் இராமநாதன் அவர்களுக்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சி தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்வதுடன் அன்னாரது பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கும் தமது ஆறுதலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கின்றது.

மயிலிட்டியை பிறப்பிடமாகவும் சிறுப்பிட்டி தெற்கை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் இராமநாதன் அவர்கள் சுகயினமுற்று யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றையதினம்(01) காலமானார்.

அன்னார் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் நீண்டகால நண்பராகவும் ஆலோசகர்களில் ஒருவராகவும் இருந்துள்ளார்.

அன்னாரது இறுதிக்கிரியைகள் இன்று (2) பிற்பகல் 2 மணியளவில் சிறுப்பிட்டி தெற்கு காளையன்   மொண்டி இந்து மயானத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: