வலிமேற்கில் இறைச்சிக் கொல்களத்தை மீண்டும் இயக்குவது தொடர்பில் ஆராய்வு!

Thursday, September 6th, 2018

வலி. மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட கரச்சி மயானத்திற்கு அருகாமையில் உள்ள இறைச்சிக் கொல்களத்தை மீண்டும் இயக்குவது தொடர்பிலான ஆராய்வு கூட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது.

வலி மேற்கு பிரதேச சபைக்கு சொந்தமான நிலத்தில் ஐந்து வருடங்களிற்கு முன் ஆரம்பிக்கப்பட்ட குறித்த கொல்களத்தில் மாடுகள் உரிய பரிசோதனகை்கு உட்படுத்தப்பட்ட பின்னர் இறைச்சி அடிக்கும் இடமாக இருந்து வந்தது.

இந்நிலையில் முறையான நிர்வாகம் இன்மையால் அந்த கொல்களம் இயங்காது போனது.

எனினும் குறித்த கொல்களத்தால் வலிமேற்கு பிரதேச சபைக்கு ஒருதொகை நிதியும் வருடாவருடம் கிடைக்கப்பெறும் வாய்ப்புள்ளதால் அந்த கொல்களத்தை மீளவும் இயங்கச் செய்து அதன் மூலம் கிடைக்கப்பெறும் நிதியை மக்களது அபிவிருத்திக்கு பயன்படுத்துடன் இறைச்சிகளை சுலபமாக பெற்றுக்கொள்ளும் வகையிலும் இதை செயற்படுத்துவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த கொல்களத்தை சுற்றி உயரமான மதில், சீ.சீ.ரீ கமரா, நவீன முறையிலான கழிவகற்றல் செயற்பாடுகள் பாதுகாப்பு உத்தியோகத்தர், சூரிய கலன் போன்ற பல வசதிகளும் வழங்கப்படவுள்ளன.

இதன்போது குறித்த பிரதேச சபையின் தவிசாளர், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளரும் வலி மேற்கு பிரதேச சபையின் உறுப்பினர்கள் சிவகுரு பாலகிருஷ்ணன் மற்றும் கட்சியின் பிரதேச சபை உறுப்பினர் துவாரகாதேவி ஜெயகாந்தன், உள்ளிட்ட பிரதேச சபை உறுப்பினர்கள் மக்கள் பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts: