வலிகிழக்கு பிரதேச சபைக்கு எதிராக புத்தூா் வடக்கு ஏரந்தனை மக்கள் ஆர்ப்பாட்டம்!

Wednesday, October 19th, 2016

மழைநீா் செல்லும் வாய்காலினை மூடி கட்டடம் கட்டுவதற்கு அனுமதி வழங்கியதை எதிர்த்தும் கட்டடம் கட்டவதற்காக மூடப்பட்ட வாய்காலை மீட்டுத் தருமாறும்கோரியும் வலிகாமம் கிழக்கு பிரதேசசபைக்கு எதிராக புத்தூா் வடக்கு ஏரந்தனை மக்கள் ஆர்ப்பாட்டமொன்னை மேற்கொண்டனர்.

unnamed (11)

இன்றையதினம் (19) காலை நடைபெற்ற குறித்த ஆர்ப்பாட்டத்தின்போது வலிகாமம் கிழக்கு பிரதேச சபையில் கடந்த ஆட்சியில் இருந்த தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினரே குறித்த அனுமதியை வழங்கியதாக தெரிவித்த மக்கள் இத்தகைய நடவடிக்கைகளால் தமது பகுதியில் மழை காலத்தில் வெள்ளத்தினால் ஏற்படவுள்ள பாதிப்புகள் அதிகரிக்கவுள்ளதாகவும் இதனால் குறித்த கட்டடத்தை அகற்றி வாய்க்காலை புனரமைத்து தமது பகுதியின் இயல்பு நிலைமையை ஏற்படுத்தி தருமாறும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

unnamed (5)

இதனிடையே குறித்த பகுதியில் உள்ள மதுபான விற்பனை நிலையத்தை அகற்றவேண்டும் என்றும் இவ்மதுபானவிற்பனை நிலையத்தினை கட்டுவதற்கு அனுமதிக்க வேண்டாம் என்றும் சபையில் கடந்த காலத்தில் குறித்த பிரதேச சபையில் எதிர்க்கட்சிதலைவராக இருந்த ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் வலி.கிழக்கு இணைப்பாளர் இராமநாதன் ஐங்கரன் தீர்மானம் கொண்டுவந்து சபையில் நிறைவேற்றியிருந்தும் இவ் மதுபான விற்பனை நிலையத்திற்கு அனுமதி வழங்கப்பட்டள்ளது.இதனால் குறித்த விடயமும் தட்டிக்களிக்கப்பட்டு விடுமோ என மக்கள் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர்.

unnamed (4)

unnamed (6)

unnamed (5)

unnamed (7)

unnamed (10)

Related posts: