வலிகாமம் வடக்கு பகுதியில் காணப்பட்ட வெடிபொருள்களை சேகரித்து செல்ல முற்பட்ட ஒருவர் காங்கேசன்துறை பொலிசாரால் கைது

Wednesday, April 25th, 2018

அண்மையில் படையினரால் விடுவிக்கப்பட்ட யாழ் வலிகாமம் வடக்கு பகுதியில் காணப்பட்ட வெடிபொருள்களை சேகரித்து செல்ல முற்பட்ட ஒருவர் காங்கேசன்துறை பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்

யாழ் வலிகாமம் வடக்கு வள்ளுவபுரம் பகுதியில் வைத்தே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரிடமிருந்து மிகவும் அபாயகரமான சுமார் பத்து கிலோ கிராம் வெடி மருந்தையும் பொலிசார் மீட்டுள்ளனர்

யாழ் குருநகர் பகுதியைச்சேர்ந்த 25 வயதுடைய இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்
படையினரின் பயன்பாட்டிலிருந்து குறித்த பகுதி கடந்தவாரம் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த வெடிபொருட்கள் படையினரால் தவறுதலாக விட்டு செல்லப்பட்டிருக்கலாம் என பொலிசார் தெரிவிக்கின்றனர்

இவ்வாறு வெடிபொருட்கள் கிடப்பதை அவதானித்த குறித்த நபர் இரகசியமான முறையில் குறித்த அபாயகரமான வெடி பொருளை சேதப்படுத்தி அதிலிருந்த வெடி பொருட்களை சேகரித்துள்ளதுடன் அதை வேறு பகுதிக்கு எடுத்து செல்லமுற்பட்டபோது பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்

சும்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளi காங்கேசன்துறை பொலிசார் மேற்கொண்டுள்ளதுடன் கைது செய்யப்பட்ட நபரை நாளையதினம் மல்லாகம் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் தெரிவித்தனர்.

Related posts: