வலிகாமம் வடக்கில் மீளக் குடியமர அனுமதிக்கப்பட்ட பகுதியிலுள்ள நான்கு பாடசாலைகளில் புதிய வகுப்பறைக் கட்டடத் தொகுதிகள்

Friday, April 28th, 2017

வலிகாமம் வடக்குத் தெல்லிப்பழைப் பிரதேச செயலகத்திற்குட்பட்ட மீளக் குடியமர அனுமதிக்கப்பட்ட பகுதியிலுள்ள நான்கு பாடசாலைகளில் தலா-62 இலட்சம் ரூபா செலவில் வகுப்பறைக் கட்டடத் தொகுதிகளை நிர்மாணிப்பதற்கு மீள் குடியேற்ற அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

அந்த வகையில் காங்கேசன்துறை நடேஸ்வராக் கல்லூரி, தையிட்டி கணேசா வித்தியாலயம், தையிட்டி சிவகுருநாதர் வித்தியாலயம், ஒட்டகப்புலம் றோமன் கத்தோலிக்க தமிழ்க் கலவன் பாடசாலை ஆகிய பாடசாலைகளில் இந்தப் புதிய வகுப்பறைக் கட்டடத் தொகுதிகள் அமைக்கப்படவுள்ளன.

Related posts: